குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கிய நடிகை வித்யாலேகா…. வைரலாகும் புகைப்படங்கள்….

By santhoshinikarthik on ஆவணி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் நடிகைகளுக்கு தோழியாகவும் காமெடி நட்சத்திரமாகவும் வலம் வந்தவர் தான் வித்யாலேகா ராமன். இவரின் தந்தை மோகன் ராமன் ஆவார். இவரும் பல படங்களில் தந்தை போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வித்யலேகா ராமன் முதலில் கௌதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

   

இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக மிக க்யூட் ஆக நடித்திருப்பார்.இதனைத் தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு வீரம் ஜில்லா போன்ற படங்களிலும் காமெடி நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது இவர் அஜித்தின் படத்திலும் நடித்து வருகிறார். ஆகையால் இவர் இனி குணச்சித்திர கதாபாத்திரங்களிலேயே ஏற்று நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.மேலும் இவர் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார் . இந்நிலையில் வித்யலேகா ராமன் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

   

 

இந்தக் கார் மோரிஸ் கரேஜ் ஈவி கார் இதன் விலை சுமார் ஏழு முதல் ஒன்பது லட்சம் வரை இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கின்றன. தனது புதிய எலக்ட்ரிக் காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வித்யலேகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் .இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.