சிறையா? சொகுசு விடுதியா?… குற்றவாளிக்கு விடுதலை… 17-வது முறை பரோலில் வெளியே வந்த சாமியார்… நீதித்துறைக்கு விடப்படும் பகிரங்க சவால்…!!

By Gayathri on ஆவணி 26, 2026

Spread the love

பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தற்போது 17-வது முறையாக 21 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டு தண்டனை பெற்ற இவர், 2020-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இதுபோன்று பரோல் பெற்று வருவது சமூகத்தில் அதிருப்தியை கிளப்பியுள்ளது. சாதாரண கைதிகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் பரோல் சலுகைகள், அதிகார மற்றும் அரசியல் பின்புலம் கொண்ட ஒருவருக்கு மட்டும் தொடர்ச்சியாக வழங்கப்படுவது, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற ஜனநாயகக் கோட்பாட்டைக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. சிறைச்சாலையை ஒரு ஓய்வு விடுதியைப் போல அவர் பயன்படுத்துவது நீதித்துறைக்கே விடப்படும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

சிறைத்தண்டனை என்பது குற்றவாளிகளைத் திருத்துவதற்கும், சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக அமைவதற்கும் உருவாக்கப்பட்டதாகும். ஆனால், செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்தின் ஓட்டைகள் வழியாகக் கொடூரக் குற்றவாளிகள் சுதந்திரத்தை அனுபவிப்பது, பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் மீண்டும் அச்சத்தையும் பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. அதிகார பலம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் இத்தகைய செயல்பாடுகள், நீதிமன்றத் தீர்ப்புகளையும் சட்டத்தின் மாண்பையும் கேலிக்கூத்தாக்குகின்றன. அரசியல் ஆதாயங்களுக்காக வழங்கப்படும் இதுபோன்ற பரோல்கள் உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்; தவறும் பட்சத்தில், நீதித்துறையின் மீது சாமானிய மக்கள் வைத்துள்ள இறுதி நம்பிக்கையும் முற்றிலுமாகச் சிதைந்துபோகும் அபாயம் உள்ளது.