தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த பழம்பெரும் நடிகையாக இருந்தவர் தான் நடிகை மனோரமா. தமிழ் திரையுலகால் தமிழ் திரைப்பட ரசிகர்களால் நடிகை மனோரமா அவர்கள் ஆட்சி என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரின் உண்மையான பெயர் கோபி சாந்தா. இவர் 12 வயதில் நடிப்பு தொழிலில் இறங்கினார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜனாகிய ஒரு தான் இவருக்கு மனோரமா என்று பெயர் வைத்தனர். இவர் ஆரம்பத்தில் வைரம் நாடக சபா நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
முதன்முதலாக மனோரமா மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்தார். பிறகு பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் கதிகலங்க வைத்தது. இவருடைய இறப்பு தற்போது வரை கூட யாராலும் ஈடு கட்ட முடியாது. நடிகை மனோரமா அவர்கள் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் போன்ற பல விருதுகளை தன்னுடைய நடிப்பு திறமைக்கு வாங்கியுள்ளார்.
இவர் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் உள்ள பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். இப்படி பல புகழுக்குரிய மனோரமா 1963ஆம் ஆண்டு வெளியான கொஞ்சும் குமரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த மனோரமா பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதாவது 1974 ஆம் ஆண்டு ஒரு பாலிவுட் திரைப்படத்தில் மனோரமா ஹீரோயினியாக நடித்தார். அந்தப் படத்தில் ஹீரோவாக மெகமுத் நடித்திருந்தார். அவரும் ஒரு காமெடி நடிகர் தான். அவருக்கு ஜோடியாக தான் மனோரமா ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த காலத்தில் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…