கண் இமைக்கும் நேரத்தில் நடந்த திக் திக் விபத்து.. தாத்தாவின் கண்முன்னே உயிர் பிரிந்த பேரன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர ரயில் விபத்து வீடியோ..!!

By Soundarya on சித்திரை 14, 2026

Spread the love

 ஒரு முதியவர் தனது இரண்டு பேரக்குழந்தைகளுடன் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அந்த வாகனத்தின் மீது ரயில் பலமாக மோதிய வேகத்தில், உள்ளே இருந்த மூன்று பேரும் சுமார் ஏழு மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். காண்போரை அதிரச் செய்யும் வகையில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

இந்தக் கொடூர விபத்தில், டிராக்டர் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த தியன் (Thiện) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். ரயிலின் அதிவேகத் தாக்குதலைத் தாங்க முடியாமல் அந்தச் சிறுவனின் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

   

விபத்தில் படுகாயமடைந்த தாத்தா மன் (Mẫn) மற்றும் மற்றொரு பேரனான லாம் (Lâm) ஆகிய இருவருக்கும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.