இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திரமும், டாாட்னம், கிறிஸ்டல் பேலஸ் போன்ற பிரபல கிளப் அணிகளின் முன்னாள் வீரருமான ஆன்ட்ரோஸ் டவுன்சென்ட், தாய்லாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானப் பராமரிப்பு ரோலர் வாகனத்தில் சிக்கி, காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தின் பிடி பிரச்சுவாப் மற்றும் பட்டாணி எஃப்சி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான தீவிரப் பயிற்சியில் டவுன்சென்ட் ஈடுபட்டிருந்தார். அப்போது காற்றில் வந்த பந்தை உதைக்க முயன்றபோது, பின்னால் வந்த பிட்ச் ரோலர் வாகனம் அவர் மீது மோதி ஏறியது. ஓட்டுநர் உடனடியாக வாகனத்தைச் சாய்வித்து அவரைப் பாதுகாப்பாக மீட்டார்.
கனரக வாகனம் அவர் மீது ஏறிய போதிலும், அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், போட்டியின் 93-வது நிமிடத்தில் அவர் மாற்றாட்டக்காரராகக் களமிறங்கி விளையாடியது ரசிகர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
