” இரு கால்களையும் கடித்து குதறிய நாய்…” அலறி துடித்த பெண்… 30 நிமிடங்களில் 7 பேருக்குக் கடி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் உள்ள ‘ஓல்டு ஹவுசிங் போர்டு காலனி’யில் தெருநாய் ஒன்று வீதியில் சென்ற பெண் ஒருவரை எந்தவித காரணமுமின்றி திடீரெனத் தாக்கி, அவரது இரண்டு கால்களையும் கடித்துக் குதறியுள்ளது.

காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த வெறிநாய் அடுத்த 30 நிமிடங்களுக்குள் அதே பகுதியில் மேலும் 6 பேரை வரிசையாகக் கடித்துக் குதறியுள்ளது.

   

இந்தத் திடீர் தாக்குதலால் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியும் பரபரப்பும் நிலவி வருகிறது. தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளவாசிகள் தீவிரமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.