மண்டிய மாவட்டம் பெள்ளூர் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். சிரவணபெலகோலாவிலிருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த மாருதி சுவிஃப்ட் காரின் ஓட்டுநர், இடதுபுறத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் காரைத் திருப்ப முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பின்னால் வந்த டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம், சுவிஃப்ட் கார் மீது பலமாக மோதியது. இதில் காரில் இருந்த சுதா ஜெயின், அவரது கணவர், மகன் மற்றும் மருமகள் ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதா ஜெயின் பரிதாபமாக உயிரிழந்தார்.
https://twitter.com/HateDetectors/status/2096848322187379152/video/1
காரில் இருந்த மற்ற மூன்று பேரும் லேசான காயங்களுடன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சையில் உள்ளனர். ஹைலக்ஸ் வாகனத்தை ஓட்டி வந்த விகாஸ் என்பவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மண்டியா எஸ்பி டாக்டர் ஷோபா ராணி அளித்த தகவலின்படி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுதா ஜெயினின் விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
