இனி என் பையன் வரமாட்டா… மரணத்திலும் மறைந்துபோகாத பார்வை… டெல்லியில் கட்டிடம் இடிந்து பலியான 18 வயது மாணவன்… குடும்பம் எடுத்த அதிரடி முடிவு…!!

By Swetha on புரட்டாதி 8, 2026

Spread the love

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 18 வயதான அர்பித் ஜெய் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்த இவர், ரக்ஷா பந்தன் பண்டிகை விடுமுறையைக் கழித்துவிட்டுத் தான் தங்கியிருந்த விடுதிக்கு சமீபத்தில்தான் திரும்பியிருந்தார்.

இந்தத் திடீர் இழப்பால் மீளாத் துயரில் ஆழ்ந்தபோதிலும், அர்பித்தின் குடும்பத்தினர் ஒரு உயரிய மனிதநேய முடிவை எடுத்தனர். அர்பித்தின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது கண்கள் தானமாக வழங்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதன் மூலம், அவரது மறைவுக்குப் பிறகும் இருவருடைய வாழ்வின் இருளைப் போக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

   

சோகத்திலும் அர்பித் குடும்பத்தினர் காட்டிய இந்தத் துணிச்சலான மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவர்களின் இந்த உறுப்புதான முடிவு, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வையும் தூண்டுதலையும் தரும் வகையில் அமைந்திருக்கிறது.