ஐயோ கொடுமையே… பெட்ரோல் போட்டு முடித்த நொடியில்… காரும் பைக்கும் மோதி விபத்து… தூக்கி வீசப்பட்ட 3 இளைஞர்கள்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

By Swetha on புரட்டாதி 20, 2026

Spread the love

ஹாத்ரஸ் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் மூன்று இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு தங்களது பயணத்தைத் தொடங்கினர். அவர்கள் பெட்ரோல் பங்கிலிருந்து மாநில நெடுஞ்சாலைக்கு வந்தடைய முயன்றனர்.

அதே நேரத்தில், அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இளைஞர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூரமான மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

   

https://twitter.com/Shahnawazreport/status/2101301998465544644/video/1

   

காரின் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று இளைஞர்களும் காற்றில் சுமார் 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, சிறிது தூரத்தில் பலத்த காயங்களுடன் விழுந்தனர். இச்சம்பவம் சாஹ்பாவ் கொத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை 122-ல் அமைந்துள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்றது.