ஐயோ… பால்கனி எரியுதே… பூட்டிய வீட்டில் பட்டாசால் வந்த விபத்து… உ . பி – யில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 9, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் கிராசிங்ஸ் ரிபப்ளிக் பகுதியில் உள்ள GH-7 சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் இந்தத் தீ விபத்து நேரிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்பு வாகனங்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன.

தீ விபத்து நடந்த சமயத்தில் அந்த பிளாட் பூட்டப்பட்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், வீட்டிற்குள் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீ அக்கம் பக்கத்திலிருந்த மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

   

https://twitter.com/IndiaToday/status/2119488278202339339/video/1

   

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெடிக்கப்பட்ட பட்டாசு ஒன்றிலிருந்து வெளிப்பட்ட பொறி, பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் பால்கனியில் விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.