கடலூர் மாவட்டம் பூவனூரில் பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வேன் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆறு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த பொதுமக்கள் உடனடியாக விபத்துக்குள்ளான வேனை தூக்கி அங்கிருந்து அகற்றி உள்ளார்கள். மேலும் வேன் கவிழ்ந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
