ஒரு லிட்டர் கழுதைப் பால் ரூ. 10,000… 250 மாடுகள், கழுதைகள், குதிரை, வாத்து என சென்னையில் பண்ணை வைத்து தொழிலில் அசத்தும் உக்ரா பார்ம்ஸ் யமுனா தினேஷ்…

Spread the love

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் யமுனா தினேஷ். இவர் உக்ரா பார்ம்ஸ் என்ற பெயரில் 15 ஏக்கரில் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பண்ணையை அவரும் அவரது கணவரும் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாக கூறுகிறார். இந்த பண்ணையினால் எப்படி தொழில் ஆரம்பித்தோம் எப்படி வளர்ந்தோம் தொழில் செய்ய விரும்புவோர் என்னென்ன செய்யலாம் என்பதை குறித்து விரிவாக கூறியிருக்கிறார் யமுனா தினேஷ்.

உக்ரா பண்ணையை பற்றி யமுனா தினேஷ் கூறுகையில், எனது கணவர் இந்த பண்ணையை பொழுதுபோக்கிற்காக தான் முதலில் ஆரம்பித்தார். பின்னர் இதன் மீது எங்கள் இருவருக்கும் ஆர்வம் வந்ததினால் இதையே தொழிலாக எடுத்து செய்யலாம் என்று முடிவு செய்து அதை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் பண்ணையில் 250 மாடுகள், 20 கழுதைகள் 10 குதிரைகள், வாத்துகள் என அனைத்தையும் வளர்த்து வருகிறோம். எங்களது முதல் பிசினஸ் பால் தான் அது தவிர மாடுகள் குதிரைகள் கழுதைகள் அனைத்தையும் விற்பனை செய்து வருகிறோம். கஸ்டமர் எந்த வகை மாடு,கழுதை, குதிரை இனங்களை விரும்புகிறார்களோ அதை நாங்கள் ஏற்பாடு செய்து அவர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

இந்தப் பண்ணையை மக்கள் தங்கள் விடுமுறை நாட்களில் வந்து விலங்குகளை தங்கள் குழந்தைகளுடன் வந்து கண்டு ரசிப்பதாகவும்.விவசாயம் மற்றும் பண்ணையில் இன்றுள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பண்ணையை தொடங்க விரும்புவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் மாடு, கழுதை,குதிரைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார் யமுனா தினேஷ்.

அவர் கூறியது என்னவென்றால், எங்களிடம் 250 மாடுகள் இருக்கின்றன. எங்கள் பண்ணையில் 15 பேர் வேலை செய்கின்றனர். ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை பார்த்துக் கொள்வார்கள். தினமும் மாடுகள் கழுதைகள் குதிரைகள் அனைத்தையும் குளிக்க வைத்து விடுவோம். அவர்கள் இருக்கும் இடத்தையும் உடனடியாக சுத்தம் செய்து விடுவோம். அவர்களுக்கு தேவையான இயற்கை உணவுகளான மாட்டு தீவனம், புண்ணாக்கு போன்றவைகளை தான் நாங்கள் கொடுப்போம். இது தவிர ஆறு மாசத்துக்கு ஒரு தடவை எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசி, கால்சியம் ஊசி எல்லாத்தையும் கரெக்டா கொடுத்து மெடிக்கல் செக்கப்ல தான் வச்சிருப்போம்.

அதே போல கழுதைகள் வளர்க்கிறது ரொம்ப ஈஸியான ஒன்று தான். மாடுகள் குதிரைகள் சாப்பிட்டது போக மீதி இருக்கும் தவுடு புண்ணாக்கு வகைகளை கழுதைக்கு வைத்தாலே போதும் ஈசியாக வளர்ந்து விடும். கழுதை பால் இன்றைய விலைக்கு ஒரு லிட்டர் 3000 முதல் 10 ஆயிரம் வரை போகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் மக்கள் இதை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். இது தவிர காஸ்மெட்டிக் பொருட்கள் தயாரிக்கவும், கழுதை பால் சோப்பு, மாய்ஸ்டரைசர், கிரீம் போன்றவற்றை தயாரிக்கவும் கழுதைப் பாலை எங்களிடம் இருந்து வாங்கிட்டு போறாங்க என்று கூறியுள்ளார் யமுனா தினேஷ்.

மேலும் பண்ணை தொடங்க நல்ல இடவசதியும் காற்றோட்டமான சூழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்த பண்ணை தொழில் செய்யலாம். முறையாக மாடு வாத்து கோழி ஆகியவைகளை நோய் வராமல் கவனித்தால் அவர்களால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது என்று கூறியுள்ளார் யமுனா தினேஷ். தங்கள் பண்ணியில் வளரும் 250 மாடுகளுக்கு அவை தங்கும் இடத்தில் ஸ்பிரிங்லர் மூலம் சூடு ஏற்படாமல் இருக்க எப்போதும் தண்ணீர் தெளித்து கொண்டே இருப்போம் என்றும் கூறியுள்ளார். பசுக்கள் கழுதைகள் குதிரைகள் போடும் சாணத்தை கூட வேஸ்ட் பண்ணாமல் அதையும் நாங்கள் உரமாக்கி விற்பனை செய்கிறோம் என்றும் கூறியுள்ளார் யமுனா தினேஷ்.

மாடுகள் குதிரைகள் கழுதைகள் கழிவுகளை சேர்த்து வைத்து உரம், வெர்மி கம்போஸ்ட், மீன் அமிலம், பஞ்சகவ்யா போன்ற உரங்களை நாங்கள் தயாரித்து விற்பனை செய்கிறோம். ஒரு சில வெளிநாடுகளுக்கும் நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம் என்று கூறியுள்ளார். நாங்கள் இந்த பண்ணை தொழிலை மிகவும் விரும்பி செய்து வருகிறோம். இது ஒரு ஆத்மார்த்தமான திருப்திகரமான வேலை. அதனால் இதெல்லாம் ஒரு தொழிலா என்று நினைக்காமல் இளைஞர்கள் இது மாதிரி தொழிலை செய்து முன்னேறலாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார் யமுனா தினேஷ்.

admin

Recent Posts

“ஒரு சீட் வச்சிருக்கவங்க பண்ற அட்ராசிட்டி”.. ஷனம் ஷெட்டியின் நக்கல் பதிவு… தமிழக அரசியலில் மீண்டும் ஒரு ‘ரிசார்ட்’ பாலிடிக்ஸ்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.…

6 minutes ago

#BREAKING: “விஜய் முதல்வர் ஆக முடியாதோ?”… தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி.. பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் களத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராக வர வேண்டும் என்ற அதீத பற்று,…

12 minutes ago

அதிகாரப் பகிர்வு வெறும் ஆசையா..? தமிழக வெற்றிக் கழகத்தின் வியூகத்தை கிழித்துத் தொங்கவிட்ட திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கத் துடிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்…

16 minutes ago

விஜய் கொடுத்த செக் மேட்… 1967-க்குப் பிறகு மாறப்போகும் தமிழக அரசியல்?… தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

17 minutes ago

“விஜய் எடுக்கும் அதிரடி முடிவு”… ஆட்சியா? அல்லது மறுதேர்தலா?… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இதுவரை கண்டிராத ஒரு அரசியல் முட்டுக்கட்டையை மாநிலத்திற்கு அளித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

21 minutes ago

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் வெடித்து வாங்கப்போகும் மழை… அக்னி நட்சத்திரத்தில் குளுகுளு அப்டேட்…!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி…

25 minutes ago