திருவண்ணாமலை கிரிவலம் என்றால் என்ன…? கிரிவலம் செல்வதற்கான காரணமும் பலன்களும்…

Spread the love

தமிழ்நாட்டில் இருக்கும் மிக முக்கியமான சிவாலயங்களில் ஒன்றுதான் திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருவது போல திருவண்ணாமலையை வலம் வருது காலம் காலமாக நடைபெறுவது வழக்கம். இது திருவண்ணாமலையில் ஆண்டுமுழுவதும் நடக்கும் விசேஷமான நிகழ்வு ஆகும். திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சல மலையை வம் வரும் பக்தர்கள் அதனால் பலவித நன்மைகள் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள் அது என்னவென்று இனி காண்போம்.

இந்த திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அருணாச்சல மலையை சுற்றி வரும் கிரிவலப் பாதை 14 கிலோமீட்டர் ஆகும். நினைத்தாலே முக்தி தரும் என கூறப்படுவது திருவண்ணாமலை. திருவண்ணாமலை தத்தை சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த புனித கிரிவல யாத்திரை 16ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வருகிறது. இந்த மலையை சுற்றி வந்தால் பாவங்கள் தீரும் என்று சிவபெருமானே கௌதமரிம் கூறியதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. எல்லா தேவர்களும் முனிவர்களும் அருணாச்சலேஸ்வரரை அவர் பூமியில் சுத்தி வருவதாக கூறப்படுகிறது. கிரிவலப் பாதையில் ஒருவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தனது முன் ஜென்ம வினைகள் போன்றவை நிவர்த்தி ஆகி அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த கிரிவலத்தை பௌர்ணமி அன்று பக்தர்கள் மேற்கொள்வார்கள். கார்த்திகை மாதங்களில் அதிகமாக கிரிவலம் வருவார்கள். இந்த புனித மலையை வலம் வருவதன் மூலம் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலன் மற்றும் ஆயிரக்கணக்கான அசமேதை யாகங்கள் செய்த புண்ணியத்தை பெறலாம். மேலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது அது நம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் மற்றும் மலையளவு பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பொழுது ஒருமனதாக சிவனை மனதில் வைத்து விட்டு செல்ல வேண்டும். கிரிவலம் செல்வதற்கு முன்பு பஞ்சாட்சர நாமமான நமசிவாய அல்லது சிவாய நம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கிரிவலம் செல்வதற்கு முன்பு வேறு எதையுமே பேசக்கூடாது. தேவையில்லாமல் பேசக்கூடாது. நிதானமாக பொறுமையாக அந்த சிவபெருமானை மனதில் நினைத்துக் கொண்டு நமது முன் ஜென்ம வினைகள் எல்லாம் சேர்ந்து நம் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் விலகி நன்மை பெருக வேண்டும் என்று மனதார கிரிவலம் செல்லும் போது நாம் நினைத்தவை எல்லாம் நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

admin

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

1 மணத்தியாலம் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

1 மணத்தியாலம் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

1 மணத்தியாலம் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

1 மணத்தியாலம் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

1 மணத்தியாலம் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

2 மணத்தியாலங்கள் ago