அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவில் பிஸினஸ்… வருடத்திற்கு 7 கோடி வருவாய் பெறும் “The Divine Foods” கிரு…

Spread the love

ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கலாம். புதிதாக முதலீட்டை தேடி தொழில் தொடங்குவோர் இருந்தாலும் ஒரு வெல் செட்டிலான வாழ்க்கை வெளிநாட்டில் வேலை அவற்றைத் துறந்து தனது கனவிற்காக ஒரு தொழிலை உருவாக்குவோர் வெகு சிலரே. அந்த வரிசையில் வந்திருப்பவர் கிரு மைக்காபிள்ளை. இவரின் The Divine Foods வரலாறு மற்றும் வெற்றிக்கதை என்ன என்பது பற்றி இனி காண்போம்.

தமிழ்நாட்டின் ஆத்தூரில் பிறந்து சென்னையில் பட்ட படிப்பை முடித்த கிரு மைக்காபிள்ளை. பின்னர் எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு படிப்பை முடித்துவிட்டு வணிக ஆய்வாளராக நல்ல ஒரு வேலையும் வாழ்க்கையும் அவருக்கு கிடைத்தது. இருந்தாலும் புதிதாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. நியூசிலாந்தின் மனுகா தேன் மற்றும் ஜப்பானிய சாஸ்கள் போன்ற ஆர்கானிக் தயாரிப்பினால் செய்யப்பட்ட பொருட்களுக்கு உலகளாவிய இருக்கும் மவுசு பற்றி அவர் அறிந்தார். வளமான பாரம்பரியமான முறையில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் சர்வதேச அளவில் குறைவாக இருப்பதை அவர் உணர்ந்தார். அதுவே The Divine Foods உருவாகுவதற்கு வழி வகுத்தது.

தனது கனவுகளை மெய்ப்பிக்க அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு திரும்பிய கிரு இந்தியாவில் பாரம்பரிய உணவுப் பொருட்களை தேடி மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். அவர் முதலாக சேலத்தின் குறிப்பிடத்தக்க மஞ்சள் வகையில் குர்குமின் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்தார். அந்த குர்குமின் சக்தி வாய்ந்த கிருமி நாசினியாகவும் பல நோய்களுக்கு மருந்தாக இருப்பதாகவும் கண்டுபிடித்தார். ஏற்கனவே நம் முன்னோர்கள் பாலில் மஞ்சள் தூளை கலந்து குடிக்கும் ஒரு பழக்கத்தை கொண்டிருப்பார்கள். ஒரு சில வீட்டில் இன்னும் அது செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு ஐடியாக்களையும் இணைத்து 2019 ஆம் ஆண்டு The Divine Foods என்ற நிறுவனத்தை தொடங்கினார் கிரு.

தனது The Divine Foods பிராண்டில் மஞ்சள் பால், பருத்திப்பால், இயற்கை ஏபிசி கலவை, தூய குல்கந்து தேன், பச்சை வாழைப்பழத் தூள், தினை உணவு மாற்று ஷேக், ஆர்கானிக் தேங்காய் சர்க்கரை, நட்ஸ் மிக்ஸ் தேன் என 35 ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தயாரிக்க தொடங்கினார் கிரு. இதில் குழந்தைகள் பராமரிப்பு, பெண்கள் பராமரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தோல் பராமரிப்பு மற்றும் நீரழிவு பராமரிப்பு போன்ற வகைகளிலும் இவர்களின் தயாரிப்பு அடங்கும்.

The Divine Foods தயாரிப்புகளின் மற்றொரு நோக்கமானது உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதற்கும் ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்வதற்கும் அதன் விநியோக சங்கிலிகளை ஒழுங்கு படுத்துவதற்கும் லட்சியமாகக் கொண்டு இருந்தது. அதற்காக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் (Fbo) The Divine Foods கைகோர்த்தது.

Fbo-க்கு எடுத்துக்காட்டாக கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்வதன் மூலம் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உயர்தர ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விவசாயிகளால் உற்பத்தி செய்யும் முடிகிறது. இதனால் தரமான உணவு பொருட்கள் கிடைப்பது மட்டுமின்றி கிராமபுற வளர்ச்சியையும் ஆதரிக்கிறது. இதுபோல் 13 fboக்களுடன் கைகோர்த்துள்ளது The Divine Foods.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்களுக்கு தங்களது உடல் நலனில் அதிக அக்கறை ஏற்பட்டதால் ஆர்கானிக் மற்றும் ஆரோக்கிய உணவுகளுக்கான நுகர்வோர் தேவை அதிகரித்து வருவதால் தயாரிப்புகள் மலிவு விலைகளில் வழங்குவதில் தனித்து நிற்கிறது The Divine Foods. என்னதான் பல பிராண்டுகள் வந்தாலும் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களின் தரத்தினால் பெறப்பட்ட இவர்களின் தயாரிப்புகள் மலிவு விலையில் கிடைப்பதால் மற்ற பிராண்டிற்கு முன்னால் தனித்துவமாக நிற்கிறது. பிரபலங்களுக்கு மத்தியில் இந்த The Divine Foods பிரபலமாக முன்னேறிக் கொண்டே இருக்கிறது. 10 லட்சம் வங்கியில் லோன் வாங்கி ஆரம்பித்த இந்த The Divine Foods தற்போது வருடத்திற்கு 7 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. அமெரிக்காவில் சொகுசான வாழ்க்கை மற்றும் வேலையை விட்டுவிட்டு தனது கனவுகளின் பின்னால் வந்த திரு மைக்காபிள்ளை இன்று அதில் தனது உழைப்பு மற்றும் விடா முயற்சியினால் வெற்றி கண்டிருக்கிறார்.

admin

Recent Posts

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

13 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

18 minutes ago

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

26 minutes ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

27 minutes ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

29 minutes ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

37 minutes ago