Connect with us

மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது நம் வீட்டிற்கு வந்தது எப்படி…? 90 வருட பழமையான Dettol இன் வரலாறு தெரியுமா…?

Startup

மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது நம் வீட்டிற்கு வந்தது எப்படி…? 90 வருட பழமையான Dettol இன் வரலாறு தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் அனைவர் வீட்டிலும் முதலுதவி பெட்டி இருக்கிறது. முதலுதவி பெட்டி என்றால் முதல் இடத்தில் இடம்பெறுவது Dettol தான். உலக அளவில் பிரபலமான டெட்டால் கிருமி நாசினி உருவான வரலாறு என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

   

1929 ஆம் ஆண்டு புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் வில்லியம் ரெனால்ட்ஸ் ரக்கிட் அண்ட் சன் என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனம் தான் பின்னாளில் Dettolலை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்ட கிரிமினின் நாசினிகள் தோல் திசுக்களை மிகவும் சேதப்படுத்தியது. மேலும் கிருமி நாசினிகள் பிரசவத்தின் போது தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. உடல் சமநிலை இன்மை மற்றும் சீல் பிடிப்பு ஆகியவற்றால் ஏற்படும் செப்சிஸ் என்ற தொற்றினால் தான் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் பெரும்பாலும் பிரசவத்தின் போது இறந்தனர்.

   

1930 களில் இந்த பிரச்சனையை தீர்க்க டாக்டர் ரெனால்ட்ஸ் தனது மகன்களுடன் இணைந்து ஆன்டிசெப்டிக் திரவத்திற்கான சோதனையை தொடங்கினார். தனது சோதனையின் முடிவில் Dettol ஆன்டி செப்டிக் திரவத்தை உருவாக்கினார். தொடர் பயன்பாட்டுக்கு பிறகு 1935ல் பெப்சிஸ் வழக்குகளில் இறப்பு 50 சதவீதமாக குறைவதை அவர்கள் கவனித்தனர். இது Dettol கிருமி நாசினிக்கு திருப்புமுனையாக அமைந்தது மற்றும் வெற்றி அடைந்தது.

 

Dettol க்கு முன்பு இருந்த கிருமி நாசினிகள் பெரும்பாலும் கடுமையானதாகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும் தோலுக்கு தீங்கு விளைப்பதாகவும் இருந்தது. டாக்டர் ரெனால்ட் கண்டுபிடித்த Dettol ஆனது குறைவான எரிச்சல் ஒட்டும் தன்மையுடனும் கிருமியை முழுவதுமாக போக்குவதாகவும் இருந்தது. முக்கியமாக சுகாதார பாதுகாப்பில் பிரசவ நேரத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை பெரும் அளவு குறைத்தது. அவர் தயாரித்த டெட்டால் இங்கிலாந்தில் பயன்படுத்த பட்டு வெற்றியடைந்ததற்கு பிறகு உலகளாவிய விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு வரப்பட்டது.

1935 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, கனடா மற்றும் தென் அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளிலும் இதன் விற்பனையை அதிகரித்தது. பிரிட்டிஷ அரசாங்கம் Dettol ஐ அத்தியாவசிய பொருட்கள் உடன் சேர்த்து ஐரோப்பிய மற்றும் அதன் இணைந்த நாடுகளில் அதன் விநியோகத்தை அதிகரித்தது.

அதிகாரபூர்வ பிராண்டாக Dettol 1936 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அந்த காலத்தில் வீட்டில் அம்மாக்கள் கிருமி நாசினியாக பயன்படுத்தும் மஞ்சளுக்கு இணையாக இது வரவில்லை. அதனால் இதன் மார்க்கெட்டிங் யுக்திகளை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை கிருமிகளில் இருந்து பாதுகாப்பது போன்ற விளம்பரங்களை ஏற்படுத்தி அதை சந்தைப்படுத்ததில் வெற்றி கண்டது Dettol.

Dettol சந்தைப்படுத்துவதில் முக்கிய உத்தியாக இருந்தது குழந்தைகளை தொற்று நோய்களிலிருந்து தாய்மார்கள் பாதுகாப்பதில் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது, உணர்ச்சிபூர்வமான விளம்பரங்களை உருவாக்கியது இன்றைய பெற்றோர்களின் மனதில் இடம் பிடித்து அவர்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க செய்தது.

Savlon போன்ற மற்ற கிருமி நாசினிகள் இருந்த போதிலும் தனது பலவீனத்தை பலமாக ஆக்கிய Dettol ஆன்டிசெப்டிக் கிருமி நாசினி மட்டுமல்லாமல் சோப்புகள், ஹேண்ட் வாஷுகள் போன்ற பல தயாரிப்புகளை பின்னர் உருவாக்கியது. தற்போது டெட்டால் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் உலக அளவில் நம்பர் ஒன் கிருமி நாசினி திரவமாக உள்ளது Dettol.

Continue Reading
You may also like...

More in Startup

To Top