#image_title
சென்னை கதீட்ரால் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் ஆறு ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை துறையினர் இந்த பூங்காவை அமைத்துள்ளனர். இந்த பூங்காவினை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த பிப்ரவரி 27 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் நிறைவடைந்து அக்டோபர் ஏழாம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பூங்காவின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை இனி காண்போம்.
பூங்காவின் நுழைவாயிலில் நுழைந்த உடனேயே உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியம் அமைந்திருக்கிறது. அதற்கு அடுத்ததாக 500 மீட்டர் நீளமுடைய ஜீப் லைன், பார்வையாளர்கள் படம் பிடிப்பதற்காக கலைஞர்களின் கலைக்கூடம், தொடர்கொடி வளைவு பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்ட பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்ட ஆர்கிட் குடில் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கண் கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்தப்பட்ட 16 மீட்டர் உயரமுடைய பத்தாயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை அயல்நாட்டு பறவைகளை கொண்டுள்ள பறவையகம் 23 அலங்கார வளைவு பசுமை குகை சூரியகாந்தி கூழாங்கள் பாதை மரவீடு அருவி இசை நீரூற்று குழந்தைகள் விளையாடும் இடம் நிழல் கூடாரம் காய்கறி தோட்டம் சிற்றுண்டியகம் ஆகிய பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா.
இந்த பூங்காவை அமைக்க ஆகியிருக்கும் செலவு 45 கோடி 99 லட்சம் ஆகும். இந்த பூங்காவில் சுவர்களில் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இது பூங்காவின் அழகிற்கு அழகு சேர்க்கிறது. இந்த பூங்காவை பார்வையிட நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 100-ம் சிறியவர்களுக்கு ரூபாய் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் அமைந்திருக்கும் சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப் லைனில் ஏறி பயணம் செய்வதற்கு ரூபாய் 250 சிறியவர்களுக்கு ரூபாய் 200 குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூபாய் 150 ஆகும். பறவையகத்தில் பல வெளிநாட்டு பறவைகளைக் காண உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூபாய் 150 சிறியவர்களுக்கு ரூபாய் 75 ஆகும். மாலை நேரத்தில் இசை நீரூற்று கண்கவர் நடனத்தை காண பெரியோர்களுக்கு ரூபாய் 50 சிறுவர்களுக்கு ரூபாய் 50 கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூபாய் 50 சிறியவர்களுக்கு ரூபாய் 40 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பங்குபெறும் சவாரி விளையாட்டுக்கு ரூபாய் 50 புகைப்பட கருவிகளுக்கு ரூபாய் 100 ஒளிப்பதிவு கருவிகளுக்கு ரூபாய் 5000 எனவும் நினைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு கட்டணங்களின் கால நேரம் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பூங்காவிற்கு செல்வதற்கு முன்பாக நுழைவு சீட்டு பெறுவதற்கு https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளத்தின் வாயிலாக பெறலாம். இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா சென்னைவாசிகளின் புதிய பொழுதுபோக்கு இடமாகவும் சொர்க்கமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…