இந்து மத தெய்வங்களில் பெருமாளை பணக்கார கடவுள் என்று சொல்லுவர். பெருமாளை வழிபட்டால் நம் பணக்கஷ்டம் தீரும் செல்வ செழிப்பு உண்டாகும் என்று கூறுவர். அப்படி பெருமாளை வழிபடுவதற்கு உகந்த தினம் எது? எப்படி வழிபாடு செய்வது பூஜையில் எந்த பொருளை கட்டாயம் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி இனி காண்போம்.

பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. திதி என்று பார்த்தால் ஏகாதசி திதி பெருமாளை வழிபட உகந்ததாகும். வளர்பிறை ஏகாதசி தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு நாட்கள் வரும். இந்த இரண்டு ஏகாதசி நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்யலாம். இந்த ஏகாதசி திதியில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
சனிக்கிழமை ஆனாலும் சரி ஏகாதசி நாட்கள் ஆனாலும் சரி பெருமாளுக்கு வழிபாடு செய்வதற்கு முக்கியமாக தளிகை இடுவார்கள். தளிகை என்றால் சைவ உணவு ஆகும். ஒரு சிலர் ஐந்து வகை சாப்பாடு வடை பாயாசத்தோடு வைப்பார்கள். ஒரு சிலர் சாம்பார் பொரியல் வடை பாயாசத்தோடு பூஜை செய்வார்கள். அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை மனதார வேண்டிக் கொண்டால் நம் நினைத்த காரியம் நிறைவேறும் செல்வ செழிப்பு உண்டாகும்.

மேலும் பெருமாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கட்டாயம் வைக்க கூடிய ஒரு பொருள் என்னவென்றால் அது துளசி. பெருமாள் பூஜையில் துளசி மாலை துளசி தீர்த்தம் வைத்து வழிபட வேண்டும். பெருமாள் கோவிலுக்கு சென்றால் கூட பெருமாளுக்கு துளசி மாலை வாங்கி சாற்றினால் அவர் மனமகிழ்ந்து கஷ்டத்தை நீக்கி வாழ்க்கையில் முன்னேற்றத்தை அருளுவார் என்பது ஐதீகம்.
