CINEMA
தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாகர்ஜூனா…பல்லாயிரம் கோடிக்கு அதிபதியான இவரது பிசினஸ் என்ன தெரியுமா…?
நாகார்ஜுனா தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவராவார். இவரின் முழு பெயர் அக்கினேனி நாகார்ஜுன ராவ் என்பதாகும். இவர் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபராவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நாகார்ஜுனா.
1967 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தோன்றியவர் நாகார்ஜுனா. பின்னர் 1989 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய காதல் நாடக திரைப்படமான கீதாஞ்சலியில் நடித்தார் நாகார்ஜுனா. இந்த திரைப்படம் மிகப் பிரபலம் அடைந்து தேசிய விருதை வென்றது. 1990 ஆம் ஆண்டு நாகார்ஜுனா பாலிவுட்டில் அறிமுகமானார். நாகார்ஜுனா பொதுவாகவே ஆக்சன் படங்களில் அதிகமாக நடித்ததன் மூலம் ரசிகர்களை பெற்றவர்.
1997 ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கிய ரட்சகன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நாகார்ஜுனா. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது. 1990களில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் நாகார்ஜுனா.
தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து இன்றளவும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை கொண்டிருப்பவர் நாகார்ஜுனா. இவரது மகன் அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் அகில் நாகார்ஜுனா ஆகியோரும் சினிமாவில் நடிகராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் நாகார்ஜுனா பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பிரபல தொழிலதிபராகவும் இருந்து வரும் நாகார்ஜுனா என்ன தொழில் செய்கிறார் அவரது சொத்து மதிப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
தென்னிந்தியாவின் மிக பிரபலமான பணக்கார நடிகராக இருந்து வரும் நாகார்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு 3050 கோடி ஆகும். ஒரு படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் நாகார்ஜுனா. இது மட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட், சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரான்சைஸ் ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார். இது தவிர தனக்கென்று ப்ரொடக்ஷன் ஸ்டூடியோவும் வைத்திருக்கிறார் நாகார்ஜுனா. N3 ரியாலிட்டி என்டர்பிரைசஸ் என்ற ஒரு பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வரும் நாகார்ஜுனாவின் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 800 கோடி மதிப்புடையதாகும். இது மட்டுமல்லாமல் தனி விமானம் 40 கோடி மதிப்பிலான பங்களா ஆடம்பரமான கார்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறார் நாகார்ஜுனா.