#image_title
உலக அளவிலும் இந்தியாவிலும் பல தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஒரு சிலர் முன்னேறுவதற்கு நாள் ஆகலாம். ஒரு சிலர் பிசினஸில் நுழைந்த உடனே உச்சத்திற்கு சென்று விடுவார்கள். எல்லாவற்றிற்கும் பின்னால் உழைப்பு கட்டாயம் இருக்கும். அப்படி ஒரு சாதாரண கூலித்தொழியாக இருந்து உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு சர்வதேச தொழிலதிபராக இருக்கும் Lottery மார்ட்டின் யார் அவரது பின்னணி என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
மியான்மர் நாட்டின் ரங்கூன் நகரத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் Lottery மார்ட்டின். 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து சிறிய அளவில் லாட்டரி விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக தனது தொழிலை விரிவுபடுத்த எண்ணிய Lottery மார்ட்டின் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் லாட்டரி தொழிலை விரிவு படுத்தினார். இது மட்டுமல்லாமல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளிலும் தனது லாட்டரி தொழிலை விரிவு படுத்தினார்.
லாட்டரி விற்பனை மூலம் கிடைத்த படத்தை லாபகரமாக செலவு செய்ய வேண்டும் என்று விரும்பிய Lottery மார்ட்டின் மற்ற பிற தொழில்களுக்கு முதலீடாக பயன்படுத்தினார். அப்படி இவர் லாட்டரி விற்பனை செய்து கிடைத்த லாபத்தினால் ரியல் எஸ்டேட் கட்டுமானம் ஜவுளி ஹோட்டல் தொழில் என பல பிசினஸ்களில் முதலீடு செய்தார். இவர் முதலீடு செய்தா அனைத்தும் அவருக்கு வெற்றியை பெற்று தந்தது. மேலும் மேலும் உயர ஆரம்பித்தார் Lottery மார்ட்டின்.
2019 ஆம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை இவரது இடங்களில் சோதனை நடத்தும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். தேர்தல் நிதி பத்திரங்கள் மூலமாக இவர் பல்வேறு கட்சிகளுக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேலாக நிதி அளித்திருக்கிறார். அதனாலேயே பிரபலமடைந்தார்.
தற்போது அனைத்திந்திய லாட்டரி வர்த்தக சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் Lottery மார்ட்டின். இதோடு நிறுத்தி விடாத Lottery மார்ட்டின் இவரது நிறுவனத்தை மேலும் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியதில் பியூச்சர் கேமிங் சொல்யூஷன் உலகளாவிய கேமிங் கேஸினோ சூதாட்டம் போன்றவைகளில் இவரது பிசினஸ் தடம் பதித்து வருகிறது.
மும்பை சென்ட்ரல் ரயில்வே பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்கம்பி பழுது காரணமாக உள்ளூர் மின்சார ரயில்கள் தாமதமாக…
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே என்ற இரண்டு வயது மற்றும் 10 மாதங்களே ஆன பெண் குழந்தை, தபாவில் 12…
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 14 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, 26…
ஹைதராபாத் ஃபதேநகர் ரயில் நிலையம் அருகே எல்பிஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு பகலாகக் கஞ்சா விற்பனை நடைபெற்று…
அக்டோபர் 24 அன்று எடுலாபாத்தில் அமைந்துள்ள 'லிவின்' பண்ணை வீட்டிற்கு கிருஷ்ணா கவுண்டின்யா என்ற இளைஞர் சென்றுள்ளார். தனது நெருங்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோடா நகரின் காயத்ரி நகர் பகுதியில் 11,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்கம்பி…