இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பல சிறப்பான இடங்கள் இருக்கின்றது. பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் தங்களது நினைவுகளாக அரண்மனை மற்றும் கோட்டைகளை விட்டு சென்றிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் நாமக்கல் கோட்டை. இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

16 ஆம் நூற்றாண்டில் இருந்த சேந்தமங்கலம் பாளையக்காரர் ராமச்சந்திர நாயக்கர் கட்டப்பட்டது இந்த நாமக்கல் கோட்டை. இதை கட்டியவர் மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசையா என்றும் கூறுகிறார்கள். மாமன்னராக இருந்த திப்புசுல்தான் பிரிதானிய கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்துப் போராட இக்கோட்டையை பயன்படுத்தி இருக்கிறார். இந்த கோட்டைக்கு அருகில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை புகழ்பெற்றது. இந்த நாமக்கல் கோட்டை அமைந்திருக்கும் மலையானது ஒற்றை கல்லினால் உருவான மலை ஆகும். இந்த மலையின் உச்சியில் தான் இதை கட்டியிருக்கிறார்கள்.
மேலும் இந்த மலையை சுற்றி ஒரு புராண கதையையும் கூறுகிறார்கள். சஞ்சீவினி மலையை தூக்கி சென்ற அனுமான் இந்த இடத்தில் அமர்ந்து மகா விஷ்ணுவை வழிபட்டதாகவும் அவர் தூக்கி சென்ற சஞ்சீவினி மலையின் ஒரு பாகமே இந்த நாமக்கல் கோட்டை அமைந்த மலை என்ற புராண கதையும் இருக்கிறது. இந்த நாமக்கல் கோட்டை நகரின் மையத்தில் நாமகிரி என்ற பெயரில் அமைந்திருக்கிறது.

மலை உச்சியில் 75 மீட்டர் அதாவது 234 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த நாமக்கல் கோட்டை. இந்த கோட்டையில் ஒரு நரசிம்மர் கோயிலும் ஒரு மசூதியும் இருக்கின்றது. இது பிரபலமான ஒரு சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இந்த கோட்டையில் அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் இதை கட்டியதாக சில கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. நாமக்கல் கோட்டை தற்போது இந்திய தொல்பொருள் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
