1990 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமானார்கள். குஷ்பூ சுகன்யா மீனா ரோஜா வினிதா சில்க் ஸ்மிதா என பல நடிகைகள் எவர்கிரீன் ஆக இருக்கிறார்கள். காலத்தால் அழியாத பல படங்களில் நடித்து இன்றளவும் அவர்கள் நடிப்பதை பார்த்தால் பிரஸ் ஆகத்தான் புதுசாக தான் தெரியும். அப்படி 90கள் காலகட்டத்தில் அறிமுகமாகி மிக பிரபலமாக புகழின் உச்சியில் இருந்தவர் தான் நடிகை வினிதா. இவர் தற்போது என்ன ஆனார் என்ன செய்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.
வினிதா விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இவரது தந்தை குவைத்தில் இன்ஜினியராக பணிபுரிந்தார். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். ஆனால் 1990 காலகட்டத்தில் ஈராக் போரின்போது குவைத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தனது அம்மா மற்றும் தம்பியுடன் குடியேறினார். முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான வினிதாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
1993 ஆம் ஆண்டு சின்ன ஜமீன் கட்டபொம்மன் ஆகிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். குறிப்பாக கட்டபொம்மன் படத்தில் பிரியா பிரியா என்ற பாடலின் மூலம் மிகப் பிரபலமாக ஆனார் வினிதா. தொடர்ந்து பெரிய குடும்பம் வியட்நாம் காலனி புது நிலவு கருப்பு ரோஜா வீரத்தாலாட்டு சிவப்பு நிலா வானத்தைப்போல போன்ற பல முன்னணி கதாநாயகர்கள் உடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் வினிதா.
நல்ல பிரபலமாக இருக்கும்போது வினிதா 2003 ஆம் ஆண்டு ஒரு பாலியல் பிரச்சினையில் சிக்கினார். இவர் பாலியால் தொழில் செய்வதாக போலீசார் இவரை கைது செய்தனர். பின்னர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பாகி வெளியே வந்தார். ஆனால் அதிலிருந்து அவர் வெளியே எங்குமே எந்த ஊடகத்திலுமே தன்னுடைய முகத்தை காட்டவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு எங்க ராசி நல்ல ராசி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் வினிதா. அதற்குப் பிறகு தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்ற தகவல் யாருக்குமே தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஓஹோ என்று வருவார் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்த பல கதாநாயகிகள் ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு முடிந்த இடம் தெரியாமல் காணாமல் தான் போய் இருக்கிறார்கள்.