இஸ்ரேலுடனான போரில் ஈரானில் சுமார் 1,060 பேர் பலி.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… ஈரான் அரசு அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 8, 2025

Spread the love

ஈரானின் ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மீது “ஆப்ரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் இஸ்ரேல் கடந்த ஜூன் 13ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலோடுடான இந்த போரில் ஈரானில் சுமார் 1060 பேர் கொல்லப்பட்டதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையில் போர் தொடங்கிய நிலையில் இரு நாடுகளும் ஏவுகணைகள் மூலமாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. இந்த போரானது கடந்த ஜூன் 24ஆம் தேதி 12 நாளை எட்டியதும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  அறிவித்தார்.

இதை இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளதால் போரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஈரான் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு ஈரானின்  தியாகிகள் மற்றும் படைவீரர்கள் அறக்கட்டளையின் தலைவர் அளித்துள்ள பேட்டியில், “இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரில் சுமார் 1060 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை 1100 அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.