எனக்கு பிறந்த மகனா இவன்..? மகனை சந்தேகப்பட்டு DNA டெஸ்ட் எடுக்க நினைத்த அப்பாஸ்.. ஷாக்கிங் தகவல்..

By Deepika

Updated on:

தன் மகன் தனக்கு பிறந்தவரா என சந்தேகப்பட்டு டி.என்.ஏ டெஸ்ட் செய்ததாக தெரிவித்துள்ளார் நடிகர் அப்பாஸ். இதை கேட்ட ரசிகர்களை இப்படியெல்லாம் செய்வீர்களா என அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Abbas

கடந்த 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படம் மூலம் நடிகரானவர் அப்பாஸ். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்துவிட்டார். தொடர்ந்து வி.ஐ.பி., பூச்சூடவா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

   
Abbas undergoes knee surgery

அப்பாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ராமானுஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். அவர் தன் மனைவி, மகன், மகளுடன் நியூசிலாந்தில் வசித்து வந்தார். குடும்பத்தை காப்பாற்ற மெக்கானிக்காக வேலை செய்ததாக தெரிவித்தார். நியூசிலாந்தில் இருந்து அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். ஒரு முறை அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து வாக்கிங் ஸ்டிக்குடன் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

Abbas about his son

தற்போது அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டார். நாடு திரும்பிய பிறகு அப்பாஸ் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் தன் மகன் பற்றி அப்பாஸ் பேசியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பேட்டியில் அப்பாஸ் கூறியதாவது, என் மகன் ரொம்ப சமத்து, அமைதியானவர். நான்லாம் அவர் வயதில் இருந்தபோது சேட்டைக்காரனாக இருந்தேன். ஏகப்பட்ட கலாட்டா செய்திருக்கிறேன். அந்த வயதில் நான் அடித்த கூத்துக்கு அளவே இல்லை. ஆனால் என் மகன் நேர் எதிராக உள்ளான்.

Abbas family

இவன் நிஜமாகவே என் மகன் தானா என வியப்பாகவும், அதே சமயம் சந்தேகமாகவும் கூட இருந்தது. இதையடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்து பார்த்தேன். அதில் அவன் என் மகன் தான் என தெரிய வந்தது என்றார்.

Abbas shocks his fans with dna test

அப்பாஸ் இப்படி கூறியதை கேட்டு பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். எந்த தகப்பனாவது இப்படி சந்தேகப்படுவானா ? நீங்கள் இப்படி செய்வீர்கள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நல்ல மகனை பெற்றால் சந்தோஷப்படுங்கள் அதற்காக இப்படியா செய்வது என பலரும் அப்பாஸை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

author avatar
Deepika