பிரபல நடிகை ஆன ரித்திகா சிங் இறுதி சுற்று படத்தின் முகம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். சுதாகர் கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக ரித்திகா நடித்தார்.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் ரித்திகா நடித்தார்.
பின்னர் சிவலிங்கா, ஓ மை கடவுளை, கொலை உள்ளிட்ட படங்களில் நடித்தார். கிங் ஆப் கோத்தா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரித்திகா குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் மாபெரும் அளவில் ஹிட்டானது. தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தில் ரித்திகா நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். கருப்பு நிற உடை அணிந்து படு கவர்ச்சியாக ரித்திகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து ரித்திகாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.