ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்கிய ஆர்த்தி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா..?

By admin on ஆனி 24, 2024

Spread the love

பிரபல நடிகரான ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரது தந்தை மோகன் பிரபல எடிட்டர் ஆவார். அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் ஆவார். மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்தது.

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்கிறாரா?..ஆர்த்தி வெளியிட்ட பதிவு..

   

கடைசியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான சைரன் அகிலன் ஆகிய படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏற்கனவே திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதாக வரும் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

   

ஆர்த்தி ரவி போட்ட இன்ஸ்டா பதிவு

 

இசையமைப்பாளர் இமான், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் விவாகரத்து செய்தியை உறுதிப்படுத்தினார்கள். இப்போது ஜெயம் ரவி தனது காதல் மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் உலா வந்தது. சில பத்திரிகையாளர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டதாக கூறினார்கள். இதுவரை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

விவாகரத்து வதந்தி...முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ஜெயம்ரவி மனைவி!

சமீபத்தில் கூட ஜெயம் ரவி நடித்த ஜெயம் படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில் காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்ற வாசகம் இடம் பெற்றது. இந்த நிலையில் ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை நீக்கிவிட்டார். இதனை வைத்து பார்க்கும் போது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து தொடர்பான செய்தி உண்மைதானா என ரசிகர்களை யோசிக்க வைக்கிறது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஜெயம் ரவி உடன் விவாகரத்தா? ஒற்றை புகைப்படத்தில் மனைவி ஆர்த்தி உடைத்த உண்மை - மனிதன்