நடிகர் மம்முட்டியுடன் இருக்கும் சிறு வயது பிரபலம் யார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர்தான் சோனியா. சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பல குழந்தைகளுக்கும் டப்பிங் கொடுத்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கின்றார். இவர் தமிழ் சினிமாவில் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த போஸ் வெங்கட் என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் சீரியலில் நடித்த பிரபலமானவர்தான் போஸ் வெங்கட். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலமாக நடித்த பிரபலமான இவர் அதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்தார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக கன்னிமாடம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
தற்போது பல திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார். நடிகை சோனியா மலையாளத் திரைப்படமான இவள் ஒரு நாடோடி என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் பொல்லாதவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட 20க்கும் ஏற்பட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் போஸ்ட் வெங்கட் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றார். குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகின்றார் சோனியா போஸ் வெங்கட். இவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் மம்முட்டி குடும்பத்துடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.