Categories: CINEMA

ஆளவந்தான் vs முத்து: பல வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டு ஹிட் படங்கள்.. வெற்றி யாருக்கு..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கமலஹாசன் மற்றும் நடிகர் ரஜினி இருவரும் வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களின்  ரசிகர்கள் தான் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். ஆனால் இவர்களிருவரும் நல்ல நண்பர்களாகவே காணப்படுகின்றனர். நடிகர் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சக்க போடு போட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  இருபெரும் நடிகர்களான இருவரும் தற்பொழுது வரை பிசியாக திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘முத்து’, உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ இவ்விரண்டு திரைப்படங்களும்  கடந்த வாரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.  18 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானதால்,  ரசிகர்கள் உற்சாகமாக இதை கொண்டாடினர்.

இந்நிலையில் முத்து, ஆளவந்தான் என இரண்டு படங்களுக்குமே 2கே கிட்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால்  படம் வெளியான 3 நாட்களில்  ரஜினியின் ‘முத்து’ திரைப்படம், 6 முதல் 7 லட்சங்கள் வரை வசூல் செய்ததாகவும், ஆனால்  கமலின் ‘ஆளவந்தான்’ அதே 3 நாட்களில்  15 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ‘முத்து’ படத்தை விட ‘ஆளவந்தான்’ தான் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago