தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கமலஹாசன் மற்றும் நடிகர் ரஜினி இருவரும் வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களின் ரசிகர்கள் தான் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். ஆனால் இவர்களிருவரும் நல்ல நண்பர்களாகவே காணப்படுகின்றனர். நடிகர் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சக்க போடு போட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இருபெரும் நடிகர்களான இருவரும் தற்பொழுது வரை பிசியாக திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘முத்து’, உலகநாயகன் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ இவ்விரண்டு திரைப்படங்களும் கடந்த வாரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானதால், ரசிகர்கள் உற்சாகமாக இதை கொண்டாடினர்.

இந்நிலையில் முத்து, ஆளவந்தான் என இரண்டு படங்களுக்குமே 2கே கிட்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் படம் வெளியான 3 நாட்களில் ரஜினியின் ‘முத்து’ திரைப்படம், 6 முதல் 7 லட்சங்கள் வரை வசூல் செய்ததாகவும், ஆனால் கமலின் ‘ஆளவந்தான்’ அதே 3 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ‘முத்து’ படத்தை விட ‘ஆளவந்தான்’ தான் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியயுள்ளது குறிப்பிடத்தக்கது.
