நாளை (ஜூலை 24) ஆடி அமாவாசை.. யாரெல்லாம் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கக் கூடாது?.. இதோ தெரிஞ்சிக்கோங்க…!

By Nanthini on ஆடி 23, 2025

Spread the love

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை அன்று திதி கொடுக்க முடியவில்லை என்றாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று முக்கிய அமாவாசை தினங்களின் போது வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது அவசியமாகும். இந்த வருடம் ஆடி அமாவாசை ஜூலை 24 வியாழக்கிழமையான நாளை வருகின்றது. இந்த நாளில் யாரெல்லாம் திதி கொடுக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்ற காரியத்தை மகன் ஒருபோதும் செய்யக்கூடாது. அப்பா இருக்கும்போது அப்பா தான் அவருடைய அப்பாவுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவோ திதி கொடுக்கவோ வேண்டும். தன் அப்பா அம்மா உயிருடன் இருக்கும் போது மனைவியின் அப்பா அம்மா அதாவது மாமனார் மாமியார் யாராவது இறந்து போயிருந்தால் அவர்களுக்கு திதி கொடுக்கக் கூடாது.

   

குழந்தை பிறந்து பெயர் சூட்டும் நாளுக்குள் ஆடி அமாவாசை வந்தால் அன்று தர்ப்பணம் செய்யவும் திதி கொடுக்கவும் கூடாது. ஆடி அமாவாசை வரும் நாள் வீட்டில் அல்லது பங்காளி என்று சொல்லப்படும் உறவுகளை யாராவது இறந்திருந்தால் 13 நாள் அல்லது 16 நாள் காரிய முடியாமல் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமாவாசைக்கு பெற்றோர்கள் அதாவது அம்மா அப்பா இருவரையும் இழந்தவர்கள் அல்லது அம்மா அல்லது அப்பா யாரேனும் ஒருவரை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால் அமாவாசைக்கு குறிப்பாக ஆடி அமாவாசையாக இருந்தாலும் ஒரு சிலர் தர்ப்பணம் செய்வதோ திதி கொடுப்பதோ தவிர்க்கலாம்.