ரூ.1 கோடி நஷ்ட ஈடு…. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிரடி நோட்டீஸ்…. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

போதைப்பொருள் கடத்தல் வழக்கின் குற்றவாளியான ஜான் பிரிட்டோவுடன் தன்னைத் தவறாகத் தொடர்புபடுத்திப் பேசியதாக அமைச்சர் மற்றும் தொழிலதிபருமான ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜான் பிரிட்டோவுடன் ஆதவ் அர்ஜுனா இருக்கும் புகைப்படத்தை திமுக ஐடி விங் இணையத்தில் பரப்பி, அவருக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டதாகக் கூறி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துகளை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கமளிக்க ஆணையிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.