கட்சி மாறி மாறிச் செல்வதில் ஆதவ் அர்ஜுனாவுக்கும் சி.விஜயபாஸ்கருக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்று அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒருவேளை ஆட்சியை இழந்தால், சுயநலத்திற்காக அங்கு சென்ற இவ்விருவரும் உடனடியாக தவெகவிலிருந்தும் விலகி வேறு கட்சிக்குத் தாவிவிடுவார்கள் என்று சாடினார்.
இவர்கள் போன்றவர்கள் கொள்கைக்காக அன்றி, வெறும் பதவி ஆசைக்காக மட்டுமே அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார்கள் என்று குற்றம் சாட்டிய முனுசாமி, தவெக அரசு மேற்கொண்டு வரும் இந்த குதிரை பேர நடவடிக்கைகள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே தாங்கள் ஆளுநரிடம் முறைப்படி புகாரளித்துள்ளதாகவும் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
