திண்டுக்கல் நாகல் நகரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தற்போதைய தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கான பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது மற்றும் கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கத் தவறியது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார். மேலும், முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் காவிரி நீரைப் பெறுவதற்கும் மேகதாது அணை திட்டத்தைத் தடுப்பதற்கும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசு தமிழக உரிமைகளைப் பெற்றுத்தரத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் சுட்டிக்காட்டும் தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், “நான் இப்படித்தான் இருப்பேன்” என்ற ரீதியில் நிதியமைச்சர் ஆணவத்தின் உச்சியில் செயல்படுவதாகச் சாடினார். MGR ஆட்சியை நாங்கள் தான் கொடுக்கிறோம் என ஆதவ் கூறுகிறார். இதை விட ஒரு வெட்கக்கேடு இல்லை. EPS தலைமையில் தான் அதிமுக இயங்குகிறது. இதன்பிறகும் அதிமுக ஆட்சி தான் நடக்கிறது என்றால் ஆதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகலாம் என கடுகடுத்தார். மேலும், சி.ஏ.ஏ. மற்றும் நீட் போன்ற திட்டங்கள் காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…