விஜய் Cabinet-ல் நுழையும் புதிய முகங்கள் யார் யார்?…. வெளிவந்த பரபரப்பு பட்டியல்… நாளைக்கு பெரிய சம்பவமே இருக்கு….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அவருடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இருப்பினும், ஆட்சி அமைந்து சுமார் 10 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், தவெக அமைச்சரவை நாளை அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினர் இடம்பெறுவார்களா என்கிற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தவெக அமைச்சரவையில் அதிமுகவினர் இடம்பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று அதிகாரப்பூர்வமாக நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “எங்களது அரசு சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருக்கும். சமூக நீதி கொள்கையுடைய காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்; இதைப் பற்றி அவர்கள் ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், விசிக சார்பில் திருமா அண்ணனுக்கும் தாங்கள் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளதாக அவர் பிரஸ் மீட்டில் உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மக்களின் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டு, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார். மேலும், “திமுகவும் அதிமுகவும் இணைந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டன. தங்களின் கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சி.வி. சண்முகம் அணியினர் தவெகவை ஆதரித்தனரே தவிர, அமைச்சர் பதவிக்காக அல்ல. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை, திமுகவே இது போன்ற தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது” என்று ஆதவ் அர்ஜுனா காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

7 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

7 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

7 மணத்தியாலங்கள் ago