ஐயோ என்னடா இது… 9-to-5 வேலையை உதறிட்டு… கோவாவுக்குப் போனா வாழ்க்கையே… செட்டில் ஆயிடும்னு நெனச்சேன்… ஆனா, இப்போ பயம் என் கழுத்தை நெருக்குது… பதறிப்போய் நிற்கும் இளம் பெண்… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 19, 2026

Spread the love

டெல்லியில் தனது 4.5 வருட கார்ப்பரேட் வேலை மற்றும் எம்பிஏ படிப்பை முடித்த அர்பிதா சாஹு, வழக்கமான பணிச்சுமையிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் தனக்கென ஒரு அர்த்தத்தைத் தேடும் நோக்கில் தனது வேலையை ராஜினாமா செய்தார். வெளிப்படையாகப் பார்க்கும்போது பலருக்கும் கோவாவுக்குச் செல்வது ஒரு கனவு வாழ்க்கையைப் போலவும், விடுமுறையைக் கொண்டாடுவது போலவும் தோன்றினாலும், அங்கு சென்ற பின்னரே அதன் உண்மையான யதார்த்தமும் சவால்களும் அவருக்குப் புரியத் தொடங்கின.

டெல்லியில் இருந்த தனது பரிச்சயமான சூழலையும் பாதுகாப்பான வழக்கமான வாழ்க்கையையும் விட்டுவிட்டு, புதிதாக கோவாவுக்குச் சென்றபோது அவருக்குப் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. குறிப்பாக, அங்கே தனக்கானவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா, புதிய சூழலில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியுமா என்ற அச்சம் அவரிடம் மேலோங்கியது. விடுமுறைக் காலமாக கோவாவைப் பார்ப்பதற்கும், அங்கே நிரந்தரமாகக் குடியேறி வாழ்வதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் காணொளிகள் மூலம் பகிர்ந்துள்ளார்.

   

https://www.instagram.com/reel/DdxykHKIZub/?utm_source=ig_web_button_share_sheet

   

வழக்கமான வேலையை விட்டுவிடுவதால் சுதந்திரம் கிடைத்தாலும், மறுபுறம் நிதி ரீதியான பாதுகாப்பின்மை, எதிர்காலம் குறித்த பயம் மற்றும் வெற்றிக்கான சமூக அழுத்தம் போன்றவையும் பின்தொடர்கின்றன என்று அவர் வெளிப்படையாகப் பேசினார். ஆரம்பக்கால உற்சாகம் மறைந்து நிஜ வாழ்க்கை அறை கூவல்களை எதிர்கொள்ளும் போது தனக்கு ஏற்பட்ட பயத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அவர் பகிர்ந்துகொண்டது, சோஷியல் மீடியாவில் பலரின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்துள்ளது.