அடியாத்தி… பிறந்த கையோடு அசால்ட்டாக… போட்டோவுக்கு போஸ் கொடுத்து… இணையத்தை மிரள வைத்த பச்சிளம் குழந்தை… ஷாக்கில் உறைந்த நெட்டிசென்கள்…!

By Swetha on ஐப்பசி 19, 2026

Spread the love

மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தரும் வகையில், எகிப்து நாட்டில் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தை, பிறவிப் பயனை அடைந்தது போல மிகவும் அமைதியான மற்றும் தளர்வான தோரணையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பொதுவாகப் பிறந்த குழந்தைகள் அழுதுகொண்டோ அல்லது புதிய சூழலுக்குப் பழக முடியாமல் தவித்தோ இருக்கும் நிலையில், இந்தக்குழந்தை எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் மிக நிதானமாகக் காணப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தை பிறப்புக்குப் பிந்தைய நடைமுறைகளின் போது குழந்தை மருத்துவர் டாக்டர் இஸ்லாம் எல்டே இந்த வீடியோவைப் பதிவு செய்துள்ளார். ஒரு திரைப்பட நாயகனைப் போல கைகளைக் கோர்த்துக்கொண்டு மிகவும் கூலாகப் படுத்திருக்கும் அக்குழந்தையின் தோற்றம், சமூக வலைதளப் பயனர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அக்குழந்தை வாழ்க்கையின் ரகசியங்களை ஏற்கனவே முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டது போல அமைதியாக இருப்பதாக நெட்டிசன்கள் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

   

புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் தாயின் அரவணைப்பைவிட்டு வெளிவரும்போது இயல்பாகவே பதைபதைப்புடன் அல்லது சலசலப்புடன் காணப்படுவார்கள். ஆனால், எகிப்து நாட்டைச் சேர்ந்த இந்த விசேஷக் குழந்தை எந்தவிதமான பதற்றமுமின்றி காட்டிய இந்த ‘அமைதியான போஸ்’ இணையத்தில் ஒரு எதிர்பாராத சென்சேஷனை உருவாக்கியுள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் முகங்களில் புன்னகையையும் வரவழைத்துள்ளது.