ஜபல்பூரில் காப்பதாகக் கூறி இளைஞர்களை வலைவீசிப் பிடித்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு வரவழைத்து பணம் பறித்து வந்த பெண்கள் கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் ஆசைகாட்டிப் பழகிய இந்த கும்பல், பின்னர் அவர்களை ஆடம்பர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பொய்யான வழக்குகளில் மாட்டிவிடுவதாக மிரட்டி பெருந்தொகையைக் கோரி வந்துள்ளது.
கோபால்பாக் ஹோட்டலில் வைத்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டிருந்தபோது, காவல்துறையினர் இந்த கும்பலை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் சிக்கி வேறு யாரேனும் பணத்தை இழந்துள்ளனரா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
https://twitter.com/udayamdigital/status/2101922174097572189/video/1
இதுபோன்ற பிளாக்மெயில் அல்லது தேவையற்ற மிரட்டல்களுக்கு பொதுமக்கள் யாரும் பயப்படக் கூடாது என்றும், உடனடியாக காவல்துறையை அணுகி புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கையும் அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
