கோயம்புத்தூர் மாவட்டம் சித்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமணம் ஆவதற்கு முன்பே சந்தோஷுக்கு தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜாதகம் பொருத்தம் இல்லாததால் சந்தோஷுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். பின்னர் தேவி ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சந்தோஷம் தேவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தனர். இதனை அறிந்த ரவிச்சந்திரன் சந்தோஷை சந்தித்து தனது மனைவியுடன் ஆன பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் பழகி வந்ததால் கோபத்தில் ரவிச்சந்திரன் தனது உறவினரான நவீன் என்பவர் உடன் இணைந்து சந்தோஷ் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்கிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
மேலும் ரவிச்சந்திரன் தான் மறைத்துக் கொண்டு சென்ற கத்தியை சந்தோஷின் கழுத்தில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
அதில் கடந்த 30-ஆம் தேதி தேவி திடீரென மாயமானார். எனது மனைவி தேவியை சந்தோஷ் கூட்டி சென்றதும் நான்கு நாட்களுக்கு திரும்ப கொண்டு வந்து விட்டதும் எனக்கு தெரிந்தது. இதனால் எனது மனைவிக்கும் எனக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டது. இதனால் தேவி கோபித்து அவரது தாய் வீட்டிற்கு சென்றார். இதற்கு காரணமான சந்தோஷை ஆத்திரத்தில் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…