திருநெல்வேலி மாவட்டம் மேல பாலாமடை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டில் 3000 ரூபாய் காணாமல் போயிருந்தது. உடனே அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு வாலிபர் எந்த பயமும் இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்து நிர்வாணமாக குளித்துவிட்டு பணத்தை திருடி சென்றது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
