பத்னேரா – அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து, தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். எனினும், அந்த இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்பிக்க நினைத்த பாதிக்கப்பட்ட இளம்பெண், தன்னிடம் இருந்த மேக்கப் பொருட்களை எடுத்து அந்த இளைஞரின் முகத்தில் பூசி வினோத தண்டனை வழங்கினார்.
அவரது முகத்தில் லிப்ஸ்டிக் அப்பியதோடு மட்டுமன்றி, கைகளிலும் வளையல்களை மாட்டிவிட்டு தனது பாணியில் நூதனமாகத் தண்டித்தார். ரயிலில் தவறு செய்த இளைஞருக்கு இளம்பெண் ஒருவர் துணிச்சலுடன் மேக்கப் போட்டு தண்டித்த இந்த விசித்திரமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது.
