கோவில்பட்டி அருகே காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் திருவேங்கடம் அருகே உள்ள கொழக்கட்டை குறிச்சியை சேர்ந்த மாரிச்சாமி என்பவருடைய மகன் ராஜேஷ் (25) என்பவரும் பயின்று வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கந்தூரி ரங்காபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் உமாவை ராஜேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரிந்த போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…
சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது…
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர் நடிகர் பாவா லக்ஷ்மணன்.…
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்தி கூர்மை, தகவல் தொடர்பு மற்றும் வியாபாரத்திற்கு காரணியாகக் கருதப்படுகிறது. பொதுவாக சுப கிரகமாக…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரபூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த…