தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரபூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 01.05.2025 முதல் 28.02.2026 வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களின் நிலுவைத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் ₹5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் இந்த திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குறு, சிறு விவசாயிகளுக்கு ₹75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அவரது அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது அதற்கான அரசாணை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி நடவடிக்கை மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…