கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாசிம் ஷேக். இவர் ஒரே மேடையில் தனது 2 தோழிகளான ஷிபா ஷேக், ஜன்னத் மகந்தர் ஆகிய இருவரை திருமணம் செய்துள்ளார். நெருங்கிய நண்பர்களான 3 பேரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர்.
பல வருடங்களாக நீடித்த நட்பு காதலாக மாறி மூன்று பேரும் சேர்ந்து வாழ்வதற்கு முடிவெடுத்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
