ரயிலில் பயணம் செய்த ஒரு இளம் பெண்ணிடம், உடன் பயணித்த இளைஞன் ஒருவன் அறிமுகமாகிப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஒரு மாத்திரையைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரை என்ன என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தச் செயலால் ரயிலில் இருந்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்த பெண் அந்த இளைஞரை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். குறிப்பாக, சமீபகாலமாக ரயில்களில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
An incident has come to light where a young woman was given a pill on a train.
The incident occurred in one of the train compartments during the journey. It is not yet clear what kind of pill the young man gave to the woman.
This incident has created an atmosphere of concern… pic.twitter.com/RIypvoyDYS
— CARTEL FIGHTS (@CartelFights) January 2, 2026
இது குறித்து ரயில்வே காவல்துறையினர் (GRP) மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த இளைஞன் யார், எதற்காக அந்தப் பெண்ணுக்கு மாத்திரை வழங்கினான் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில்களில் தெரியாத நபர்களிடம் இருந்து உணவு அல்லது மருந்துகளைப் பெற வேண்டாம் எனப் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
