திருப்பத்தூர் அருகே முறையான மருத்துவம் படிக்காமல் காய்ச்சலுக்கு ஊசி போட்டு 20 நிமிடங்களில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த புதுக்கோட்டை ராஜி கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் சக்திவேல் (34). இவர் அதே பகுதியில் வெல்டிங் கடையில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. சக்திவேல் வீட்டிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக பார்த்திபன் (35) என்ற மருத்துவர் சென்று ஊசி போட்டுள்ளார்.
ஊசி போட்ட 20 நிமிடங்கள் கழித்து சக்திவேல் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவருடைய மகன் பார்த்திபன் என்பவர் டயாலிசிஸ் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு அரசு மருத்துவமனையிலும் வேலை பார்த்து வந்துள்ளார்.
அரசு மருத்துவமனையிலும் பல குளறுபடிகளில் ஈடுபட்டதால் ஒரு வருடத்திற்கு முன்பு அரசு மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியிலிருந்து நீக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று சக்திவேல் நோயாளிகளின் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் காய்ச்சலுக்கு ஊசி போட்டு 20 நிமிடங்கள் கழித்து வாலிபர் உயிரிழந்ததால் அப்பகுதியில் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தற்போது போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…