மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, அஜ்னர் நதியைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணிகளால் தனது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2026 ஜனவரி மாதம் முதல் இந்த நதியிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். மாசுபட்ட நீரிலும், அழுகிய குப்பைகளிலும் நீண்ட நேரம் இறங்கி வேலை செய்ததால், தனது கைகளில் கடுமையான தோல் தொற்று மற்றும் அரிப்பு ஏற்பட்டுள்ளதை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் காட்டியுள்ளார்.
மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தான் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் வலி மற்றும் தோல் உரிதல் காரணமாகத் தினமும் இரவு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல நேரங்களில் கையுறைகள் போன்ற போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவுகளை அகற்றியதால், நீரிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் இரசாயனங்களால் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.
மாதக்கணக்கில் கஷ்டப்பட்டுத் தான் சுத்தம் செய்த நதியில், பொதுமக்கள் மீண்டும் மீண்டும் குப்பைகளைக் கொட்டுவது தனக்கு மிகுந்த மனவேதனை அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். தனி ஒருவராகப் போராடும் தனக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், மக்கள் மனமாற்றம் அடைந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…