“முதல் மனைவியின் மகன் வாங்கிய பணம்…” மெஷின் இருந்தாதானே காசு தருவீங்க…? கைரேகை இயந்திரத்தை அபேஸ் செய்த தம்பதி…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!

By Devi Ramu on தை 13, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, பொங்கல் பரிசுத் தொகை கிடைக்காத ஆத்திரத்தில் ரேஷன் கடையின் கைரேகை இயந்திரத்தைத் திருடிச் சென்ற தொழிலாளி மற்றும் அவரது இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டனர். ரமேஷ் என்ற அந்த நபர், தனது முதல் மனைவியின் மகனிடம் இருந்த அசல் ரேஷன் கார்டு மூலம் ஏற்கனவே பொங்கல் தொகுப்பு வாங்கப்பட்டதை அறிந்ததும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குடும்பத் தலைவனான தனக்குத் தெரியாமல் எப்படிப் பணம் கொடுக்கலாம் எனக் கூறி, அங்கிருந்த இயந்திரத்தை அக்குடும்பத்தினர் தூக்கிச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் திருட்டுச் சம்பவத்தால் இயந்திரம் இல்லாத காரணத்தினால், கிராம மக்கள் நீண்ட நேரம் பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிக்கும் நிலை உருவானது. கடையின் விற்பனையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், ரமேஷ் மற்றும் அவரது மனைவியைப் பிடித்து சிறையில் அடைத்ததுடன் இயந்திரத்தையும் மீட்டனர். ஒரு நபரின் பொறுப்பற்ற செயலால் ஊர் மக்கள் அனைவரும் பரிதவித்த நிலையில், இயந்திரம் மீண்டும் கடைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகே பொதுமக்கள் நிம்மதியுடன் தங்களது பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் சென்றனர்.