தாய்-முன்சியாரி சாலையில் லா ஜேக்லா அருகே கனமழை காரணமாக பாறைகளும் இடிபாடுகளும் திடீரென சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, சாலையின் மறுபுறம் சென்ற பல பயணிகள் உடனடியாகப் பயணித்துத் திரும்ப முடியாமல் வழியிலேயே சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால், வேறு வழியின்றி மக்கள் அருகிலிருந்த ஆபத்தான மாற்றுப் பாதையையும், சீறிப்பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளத்தையும் கடக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அவசரத் தேவைகளுக்காகவும் பாதுகாப்பான இடங்களை அடையவும் மக்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த ஆபத்தான பாதையைப் பயன்படுத்தினர்.
https://twitter.com/zingabad/status/2088510479031529643/video/1
இவ்வாறு வெள்ளத்தைக் கடக்க முயன்றபோது, ஒரு பெண் பாயும் நீரோட்டத்தில் நிலைதடுமாறி அடித்துச் செல்லப்பட்டு நூலிழையில் விபத்திலிருந்து உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேதமடைந்த சாலையைச் சீரமைத்து போக்குவரத்தை உடனடியாகச் சீர்செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
