எம்மாடி நம்பவே முடியல..! மூக்கு வழியே சாப்பிடும் பெண்… பந்தயத்தில் தொடங்கிய வினோதப் பழக்கம்… மிரண்டு போன நெட்டிசன்கள்..!!

By Soundarya on தை 12, 2026

Spread the love

அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த கேத்தரின் என்ற பெண்ணின் வினோதமான உணவுப் பழக்கம், சமூக வலைதளங்களில் பலரையும் திகைக்க வைத்துள்ளது. பொதுவாக மக்கள் வாய் வழியாக உணவைச் சுவைக்கும் நிலையில், கேத்தரின் தனது மூக்கின் வழியாக திரவ உணவுகளை உட்கொண்டு வருகிறார். கல்லூரிப் பருவத்தில் நண்பர்களுடன் விளையாட்டாகக் கட்டிய ஒரு பந்தயமே (Bet) இதற்குக் காரணம். அப்போது முதல்முறையாக ஒரு பழப் பானத்தை (Fruit juice) மூக்கின் வழியாகக் குடிக்க முயற்சித்துள்ளார்.  அந்த முயற்சியின் போது அவருக்குத் தலையில் ஒருவித தலைச்சுற்றலும், வித்தியாசமான சுவையும் ஏற்பட்டுள்ளது.

 

   
View this post on Instagram

 

A post shared by TLC (@tlc)

அதுவே நாளடைவில் பழக்கமாகி, தற்போது ‘அடிமை’ ஆகும் அளவிற்கு மாறியுள்ளது.  புகழ்பெற்ற ‘டி.எல்.சி’ (TLC) தொலைக்காட்சியின் ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்ஷன்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இவரது இந்த வினோதப் பழக்கம் உலகிற்குத் தெரியவந்தது. வாய் வழியாகச் சாப்பிடாமல் மூக்கின் வழியாக உணவை உட்கொள்ளும் கேத்தரினின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.