சுற்றி சுழன்றடித்த மரண வெள்ளம்… நடுவே அசையாமல் நின்ற “ஒற்றை வீடு”… மரணத்தின் விளிம்பிலிருந்து கதறித் துடித்த பெண்… வைரலாகும் நேபாள வெள்ள வீடியோக்கள்…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

லடாக் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு நதியின் பாதையை அடைத்து அணை உடைந்ததால், நேபாளத்தில் மிகக் கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கோரமான இயற்கைச் சீற்றத்தில் சிக்கி இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் இந்த பேரிடரால் முற்றிலுமாக உருக்குலைந்து போயுள்ளன.

இந்த வெள்ளத்தின் தீவிரத்தைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அதில், சீறிப்பாய்ந்து வந்த சேற்று வெள்ளம் சுற்றியிருந்த கட்டிடங்கள் அனைத்தையும் அடித்துச் சென்ற நிலையிலும், ஒரு பச்சை நிற வீடு மட்டும் எவ்வித சேதமுமின்றி உறுதியாக நின்ற காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த வீட்டின் மாடியில் தஞ்சம் புகுந்திருந்த மூவர், அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக உயிருடன் இருப்பதை மற்றொரு வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.

   

இதற்கிடையே, மலைப்பகுதியில் சிக்கியிருந்த பெண் ஒருவரை ராணுவத்தினர் மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்டனர். தனது குடும்பத்தினர் மற்றும் உடைமைகள் அனைத்தும் கண்முன்னேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், உயிர் பிழைத்தும் அந்தப் பெண் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். ராணுவத்தின் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னும் பல பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் ஏராளமான மக்கள் உதவிக்காகக் காத்திருப்பதால் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.