திக்.. திக்..! விபத்தா? அலட்சியமா?… நொடியில் தலைகீழான வாழ்க்கை… ராட்சத இரும்பு கம்பிகள்… நொறுங்கிய கார்… சாலையில் அதிர்ச்சி சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 17, 2026

Spread the love

மும்பை – தானே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூண் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கனரக இரும்புச் சட்டகம் ஒன்று நிலைதடுமாறி, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த காரின் மீது பலமாக விழுந்தது. இதனால் காரின் மேற்கூரை நொறுங்கி வாகனம் சுக்குநூறானது.

இவ்விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும், உள்ளே பயணித்த பெண்ணும் காயங்களுக்கு உள்ளாகினர். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்களும் மீட்புக் குழுவினரும் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பான சாலையில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.